...
அரசியல்செய்திகள்

காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக பாடுபடுகிறோம்-ஜீவன் தெரிவிப்பு

மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக நாங்கள் முழு மூச்சாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அதன் அடிப்படையில் சிவில் சமூகத்தினருடனும், சமூக மற்றும் கல்வி ஆர்வலர்களுடனும் நேற்றைய தினம் எனது தலைமையில் கலந்துரையாடலொன்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் மலையக மக்களுக்கு வீடு என்பது ஒரு பக்கம் இருக்க காணி உரிமையும் நிச்சயமாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான ஒரு வரைமுறையை நாம் தயார் செய்ய வேண்டும் .

இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அறிக்கையினை தரும் பட்சத்தில் அதனூடாக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடுவதாக தெரிவித்திருந்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen