...
செய்திகள்

காத்தான்குடியை வசிப்பிடமாக கொண்டவரே நியுசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்வர்..

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் நேற்று (03/09)நியூசிலாந்தின் ஒக்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடியில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த மொஹமட் எம். சம்சுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருந்த அவர், சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் அமைப்புடன் இணைய திட்டமிட்டதாக நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், ஒக்லாந்து விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நியூசிலாந்தில் தனிநபர் தாக்கதல் நடத்த திட்டமிட்ட நிலையில் கைதாகி, கண்காணிப்பு காலத்தில் இருந்த போது நேற்று பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார்.
அவரால் கத்தியால் குத்தப்பட்ட 7 பேர் காயமடைந்தனர். அதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும், தாக்குதலை மேற்கொள்ளப்பட்ட குறித்த நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் எட்டு வயதிலேயே கொழும்பு சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Thank you – Selva

Related Articles

Back to top button


Thubinail image
Screen