செய்திகள்

கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ்சிற்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு..

கொழும்பில் தடுத்து வைத்து அச்சுறுத்தியதாக கூறப்படும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ்சிற்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சுவிஸ் தூதரக அதிகாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடித்து பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என தெரிவித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், நாளைய தினமும் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ்சிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ்சிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button