உலகம்

காபூல் விமான நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்து ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில் அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் சிறுவர்கள் உட்பட குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலிபான்களின் கட்டுப்பாடுகளால் அழுத்தங்களுக்கு உள்ளான ஆப்கானிஸ்தான் நாட்டவர்களில் பெரும்பாலானோர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு விமான நிலையத்துக்கு வருகைதந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்துக்கு அருகில் குண்டுவெடிப்புகள் இடம்பெறலாம் என சர்வதேச புலனாய்வு பிரிவுகள் எச்சரிக்கை விடுத்து சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பாதுகாப்பு எச்சரிக்கை காரணம் விமான நிலையத்துக்கு வருகை தருவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதுவொரு தற்கொலை குண்டுத்தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அதேவேளை, சரியான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Related Articles

Back to top button


Thubinail image
Screen