கார் டிரைவர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட விஜய்

தன் கார் டிரைவரின் மகள் திருமணத்தில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார் விஜய். சென்னையில் தொடங்கிய முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தன் கார் டிரைவர் ராஜேந்திரன் மகள் திருமண வரவேற்பில், தன் மனைவி சங்கீதாவுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார் விஜய். அந்தப் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் அட்லீ ஆகியோர் இந்தத் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.