பதுளை வின்சென் டயஸ் மைதானத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.
கார் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன், அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது மோதியுள்ளது.
இதனால் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.