காலத்தால் அழியாத ஒரு தலைவன்.

uthavum karangal

தென்கிழக்கின் உதயதாரகை சம்மாந்துரை மன்னின் மைந்தன் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்

தான் தான் என்றில்லாமல் தன் மண்ணுக்காக தன் சொந்த நாட்டின் உறவுகளுகாக அயராது உழைத்த தலைவா உன்னை போல் ஒருவனுக்காக இச்சமூகம் ஏக்கத்துடன் காத்திருக்கிறது.

பதவியா சமூகமா என்ற கேள்விக்கு சமூக நலனே என்ற ஒற்றை வார்த்தையிளும் செயலிளும் நிரூபித்த சமூக தொண்டனே உன் இழப்பு இன்றும் நிவர்த்தி செய்ய முடியாத இடைவெளி.

சமூக ஒற்றுமையும் ஓருமைப்பட்டுக்காக அயராது உளைத்து இன்றும் எம்மை போன்று பலரின் உள்ளத்தில் இடம் பிடித்து உயிறாயில்லாவிடினும் உணர்வாய் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு நினைவாய் ஒன்றற களந்து இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்.
பிரிவினை வேண்டாம் என்று உறக்க மொளிந்த நாவினில் நான் அதிகம் கண்டதென்னவோ இறைவசனங்கள்.

ஒலுவில் துறைமுகம் தொட்டு தென்கிழக்கு பல்கலைகழகமாகட்டும் இன்னும் எழுத்துக்களால் பொறிக்கபடாத சாதனைக்கு சொந்தக்காரன்.

இரண்டு தசாப்தங்கள் உருண்டோடிவிட்டது ஒற்றுமை பறைசாற்றி அதற்காக தன்னை அர்பணித்த உன் சமூகத்தில் இன்று எத்தனயோ பிளவுகள் பதவிக்காக, பட்டதுக்காக, செல்வத்திற்காக இன்னும் எத்தனையோ சொட்ப இலாபங்களுக்காக..

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் தன்னைகாட்டிளும் தன் சமூகத்துக்காக/நாட்டுக்காக வாழ்ந்து இன்றும் பலர் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உமக்காக உம்மை போல் ஒரு தலைவனுக்காக ஏங்கும் ஒருவனின் குரல்.

‘கருத்து வேறுபாடென்னும் கறையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும். மிகவும் புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள் வேகத்தைக் குறைக்காமல் வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்.!’ – M.H.M. அஷ்ரப்

உம்மால் ஆரம்பமான தேசிய ஒருமைபாட்டு இயக்கம் என்றோ ஒருநாள் உயிர்பெறும் என்கின்ற ஏக்கத்துடன் விடைபெறுகிறேன்.

ஆக்கம் : Salman

தொடர்புடைய செய்திகள்