செய்திகள்
காலநிலையில் மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணம் ஆகிய பகுதிகளுடன், பதுளை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான காலநிலை மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மேல், வடமேல், மாகாணங்களிலும், காலி மாத்தறை ஆகிய மாவங்களிலும் மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுள்ளது.
இந்த நிலையளில், தங்காலை முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை கடற்கரையை அண்மித்த பகுதிகளில் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.