செய்திகள்

காலி – கிங்தொட்டையில் அசாதாரண நிலை ஊரடங்கு சட்டம் அமுல்

காலி – கிங்தொட்டை பிரதேசத்தில் அடையாளம் தெரியாத சிலர் மக்கள் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் சில வீடுகள் சேதமடைந்திருப்பதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் . அங்கு காவற்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கருவாத்தோட்டம்(குருந்துவத்தை) மாஹப்புகல, வெலிப்பிட்டிமோதர, உக்வத்தை மற்றும் பியதிகம ஆகிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது (19ம் திகதி காலை 9 மணி வரை) இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று காவற்துறையினர் கோரியுள்ளனர்.

போலியான செய்திகளை வெளியிடுகின்ற நபர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவற்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி மூலம்- 5வரி செய்திகள் http://aivaree.com/

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button