உலகம்

கால்பந்தாட்ட போர்வையில் சென்ற 10 சிரிய நாட்டவர்கள் கிரேக்கத்தில் கைது.

கரப்பந்தாட்ட அணி என்ற போர்வையில் சென்ற 10 சிரியா நாட்டவர்கள் கிரேக்க தலைநகர் எதென்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணக்கூடிய விளையாட்டு ஆடைகள் பயணப் பைகள் மற்றும் கரப்பந்துடன் அவர்கள் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட பயண ஆணங்களுடன் அவர்கள் கிரேக்கத்தில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு தப்பியோட முயற்சித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டப்பூர்வ ஆவணங்கள் எதுவுமின்றி அவர்கள் திருடப்பட்ட யுக்ரேன் கடவுச்சீட்டுக்களுடன் கிரேக்கத்துக்கு சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download