செய்திகள்மலையகம்

காவலரண் அமைக்கும் நடவடிக்கை ஜீவனின் தலையீட்டால் நிறுத்தம்.!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டத்தில் அமைக்கப்படவிருந்த பொலிஸ் காவலரண் நடவடிக்கை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஓல்டன் தோட்டத்தில், பெப்ரவரி மாதம் முதல் பகுதியில், தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றி, நீண்டகால பணிநிறுத்தம் மற்றும் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

இதன் காரணமாக, சிறுவயது இளைஞன் உட்பட 10 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் அங்கு நடந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக, ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஓல்டன் தோட்டத்தில், பொலிஸ் பாதுகாப்பு அரண் ஒன்றை அமைக்க ஹட்டன் பொல்ஸ் தலமையகம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

இதற்கு ஓல்டன் தோட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கும் கொண்டுவந்திருந்தனர்.

இதையடுத்து, ஹட்டன் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரை, நேற்று (12) ஜீவன் தொண்டமான் சந்நித்து, இது தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் வலியுறுத்திய விடயங்களுக்கு அமைய, ஓல்டன் தோட்டத்தில் பொலிஸ் காவலரண் அமைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும், ஹட்டன் பிரதேசத்தில், கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்கள் செலுத்திக் கொள்ளவதற்கான விழிப்புணர்வை வழங்குவதற்கு, உதவி பொலிஸ் அத்தியட்சகர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button