உலகம்

காஷ்மீரில் மீண்டும் தடை உத்தரவு!

மொகரம் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீரின் சில பகுதிகளில் தடை உத்தரவுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் ஐந்தாம் ஆம் திகதி நீக்கியதுடன் காஷ்மீரை இரண்டு பிரதேசங்களாக பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக அங்கு 144 தடை உத்தரவையும் கடுமையான கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்திருந்தது.

காஷ்மீரில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு  படையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
இதனால் காஷ்மீரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து அமைதியான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, அங்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விலக்கியிருந்தது.

இந்நிலையிலேயே மொகரம் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download