உலகம்

காஸாவில் வான் தாக்குதல்

காஸா மற்றும் சிரியாவிலுள்ள பலஸ்தீனிய  ஆயுததாரிகளின் நிலைகளை இலக்கு வைத்து  வான்தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

தம்மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காஸா பிராந்தியம் மற்றும் டமஸ்கஸின் தெற்குப்  பகுதிகளில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வான்தாக்குதல்களால் காஸா பகுதியில் 4 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள போதிலும், உயிரிழப்புக்கள், சேதங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் வௌியாகவில்லை.

இஸ்ரேலின் ஏவுகணைகள் பலவற்றை தமது  வான்பாதுகாப்புக் கட்டமைப்புக்கள் தகர்த்துள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button