கிண்ணியாவில் இன்று என்மருக்கு தொற்றுறுதி.!

uthavum karangal

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவில் இன்று (13) கொரோனா தொற்றாளர்கள் 8 பேர் இனம்காணப்பட்டுள்ளதாக கிண்ணியா பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி எம். எச். எம். றிஸ்வி தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஒருவர் வைத்தியர் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாலிந்துறை கிராமசேவகர் பிரிவில் ஐவரும் ஏலவே முடக்கப்பட்டுள்ள மாஞ்சோலை கிராமத்தில் மூவருமாக இன்று 8 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

பிரதேச சுகாதார வைத்திய நிலயத்தில் 42 பேருக்கு மேற்கொள்ள ப்பட்ட பரிசோதனையின்போது நான்கு பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.

கிண்ணியா வைத்திய சாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்