...
செய்திகள்

கிண்ணியா விபத்தையடுத்து பிரதேச மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலத்தில் பொதுப்போக்குவரத்து  இடம்பெற்றதனாலேயே குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதே போன்ற அனர்த்தம் மூதூரில் கடந்த காலத்திலும் இடம்பெற்றதுடன் பலர் உயிரிழந்தனர்.

ஒரு கிலோமீற்றர் அளவிலான தூரமே கடக்க வேண்டியுள்ளது. எனவே அது தொடர்பில் ஆராயுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, குறித்த அனர்த்தத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கத்தின் உடனடியான தலையீட்டில் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

இந்த மிதப்பு பாலத்தின் ஊடாக பொதுப்போக்குவரத்து முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனச் சபையில் யோசனை ஒன்றை முன்வைப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வாகன டயர்களை தீயிட்டு அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன் குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen