Breaking Newsசெய்திகள்
கிதுல்கலையில் விபத்து டயகமையை சேர்ந்த 22 வயது இளைஞன் பலி

கிதுல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் களுகொவுத்தென்ன கம்பி பாலத்தின் அருகில் டயகம இருந்தது கொழும்பு நோக்கி சென்ற இருசக்கர வண்டியும் எட்டியாந்தோட்ட பிரதேசத்திலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கனரக வாகன தூக்கி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு சக்கர வண்டியில் பயணம் செய்த 22 வயதுடைய டயகம முதலாம் பிரிவு டயகம வசிக்கும் இளைஞன் ஒருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை 10 மணி அளவில் (04/04/21) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ள இளைஞரின் சடலம் கித்துள்கலை மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கனரக வாகன தூக்கி சாரதி கிதுல்கல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளை கிதுலல் பொலிசார் மேற்கொள்கின்றனர்.
யுகேஸ்