மலையகம்
கினிகத்தேனயில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்
கினிகத்தேன – பகத்துலுவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
அதிக வேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி கால்வாய் ஒன்றில் குடைசாய்ந்ததில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும் மற்றும் ஒரு நபரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் அதிகவேகத்தை கட்டு படுத்த முடியாமல் போனமை காரணமாகவே விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் குறித்து கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

