...
செய்திகள்

கினிகத்தேனையில் மண்சரிவினால்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திகா-உதயா நிவாரண உதவி..

கினிகத்தேனை கெனில்வேர்த் இலக்கம் 4 பிரிவில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திகா- உதயா நிவாரண திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிவாரணப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன்
குறிப்பிட்ட தோட்டத்திற்கு விஜயம் செய்து வழங்கி வைத்தார். 
இவருடன் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி சசிகலா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத்தலைவர் கனகராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இதேவேளை மண்சரிவினால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றித் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கெனில்வேர்த் தோட்ட முகாமையாளர் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரனிம் உறுதி வழங்கியுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen