அரசியல்செய்திகள்

கினிகத்தேன பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் வைத்தியசாலையில் .?

கினிகத்தேன போலீஸ் பிரவுக்குட்பட்ட லக்சப்பான பொல் பில்ல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் எமது செய்தியாளர் தெரிவிக்கும் போது பொதுஜன பெரமுன வின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு வரும் வழியில் பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க வின் வாகனத்தை எதிர்த்து நின்று எதிரிப்பு தெரிவித்த ஒருவருக்கே எஸ்.பி.திஸாநாயக்கக்வின் பாதுகாவலர் துப்பாக்கி சூடு நடத்தியதாக குறிப்பிட்டார்.

காயமடைந்தவர் தற்போது கரவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரதேச போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button