செய்திகள்

கினிகத்ஹேனயில் கோர விபத்து.

கினிகத்ஹேன – அம்பகமுவ பகுதியில் காரொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரின் சாரதி காயங்களுக்குள்ளானதுடன், குறித்த கார் பலத்த சேதத்திற்குள்ளானது.

அதிக வேகத்தில் கார் பணித்துள்ளதுடன், சாரதியின் தூக்க கலக்கத்தினால், கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

விபத்து தொடர்பில் கினிகத்ஹேன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை,கிளிநொச்சியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் பரந்தன் பகுதியை சேர்ந்த 35 வயதான  ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button
image download