செய்திகள்

கினிகத்ஹேன துப்பாக்கி பிரயோகத்தி ல் கைது செய்யப்பட்டவர்கள் 25ம் திகதி வரை விளக்கமறியலில்..

கினிகத்ஹேன பொல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட , நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்கவின்  பாதுகாப்பு பிரிவின் 02 உத்தியோகஸ்தர்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் மாவட்ட நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரமுகர் பாதுகாப்பு  பிரிவில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

கினிகத்ஹேன பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, இளைஞர்கள் சிலருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றபோது பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது இரண்டு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download