செய்திகள்

கிரிக்கெட் நிறுவன தேர்தலிலிருந்து மூவர் விலகல்.

(ராகவ்)

நபைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவள தேர்தலிலிலிருந்து மூவர் விலகியுள்ளனர்.

அதற்கமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்களான கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் விலக தீர்மானித்துள்ளனர்.

குறித்த மூவரும் முறையே தலைவர், பிரதித் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து குறித்த மூவரும் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
…..

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com