...
நுவரெலியாமலையகம்

கிரிமெட்டிய கிராம அலுவலர் காரியாலயத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள சிரமப்படும் மக்கள்

பெரும்பாலான நேரங்களில் கிரிமெட்டிய கிராம அலுவலர் பிரிவு 476A பூட்டிய வண்ணமே காணப்படுவதால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இதனால் கர்லிபெக், தம்பகஸ்தலாவ, எவோக்கா , கிரிமெட்டிய, டெஸ்போர்ட்B, டெஸ்போர்ட்A ஆகிய 6 தோட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கான சேவைகளை பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சிக்கலைகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது கடமையில் இருக்கும் கிராமசேவகர்கள் மஸ்கெளியா பிரதேசத்தில் இருந்து வருகை தருவதால் அவர் நேரத்திற்கு காரியாலயத்திற்கு சமூகமளிப்பதும் இல்லை  மற்றும் அவர் காரியாலயத்திற்கு  சமூகமளித்தாலும் சுமார் ஒரு மணித்தியாலயம் மாத்திரமே காரியாலயத்தில் கடமை புரிகின்றார் ,அந்த நேரத்தில் அப்பிரதேச  மக்களுக்கான வேலையை முறையாக செய்துகொள்ள முடியாமல் மிக பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுக்கின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் உரிய கிராமசேவகர் இரண்டு வசங்களை பார்ப்பதாக தகவல் , வெளியாகியுள்ளது. அவரை சந்திப்பது என்றால் கிரிமெட்டியவில் இருந்து பெறக்கும்பரைக்கு செல்ல வேண்டும் என்று கிராம சேவகர்கள் துண்டுபிரசுரம் ஒன்றின் மூலம் தெரி யப்படுத்தியுள்ளார்.

  குறித்த கிராமசேவகர் இரண்டு வருடத்திற்கு மேலாக கிரிமெட்டிய கிராமசேவகர் பிரிவில் கடமையாற்றி வருகின்றார் என்ற போதிலும் எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளும் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் சேவைகளையும் அவர் செய்து கொடுக்கவில்லை  என்பது தொடர்பிலும் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் குறித்த கிராமஅலுவலர் தகாத வார்த்தைகளால் பொது மக்களை திட்டுவதாகவ நானுஓயா பொலிஸ் பல்வேறு முறைப்பாடுகள் காணப்படுகின்றன.

 

குறித்த சம்பவம் தொடர்பில் சம்மபதப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.சந்ரு ,செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen