விளையாட்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோ நிகழ்த்திய மற்றுமொரு சாதனை.

ஆடவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில், அதிக கோல்களைப் பெற்றவர் என்ற உலக சாதனையை போர்த்துக்கல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனதாக்கியுள்ளார்.

அயர்லாந்து அணியுடன் நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகான் போட்டியில், 2 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் போர்த்துக்கல் அணி வெற்றிபெற்றது.

36 வயதான ரொனால்டோ, இந்தப் போட்டியில் இரண்டு கோல்களை தலையால் அடித்து, தமது 110 மற்றும் 111 ஆவது கோல்களைப் பதிவுசெய்தார்.

ஈரானின் முன்னாள் வீரரான அலி டையி, 1993 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரையில், 109 கோல்களைப் பெற்று, ஆடவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றவர் என்ற சாதனை நிகழ்த்தியிருந்தார்.

இந்த சாதனையை 2020 யூரோ கிண்ணப் போட்டியில், ரொனால்டோ சமன் செய்திருந்தார்.

இந்த நிலையில், மேலும் இரண்டு கோல்களை பதிவு செய்ததன் மூலம், அந்த சாதனையை முறியடித்து, ஆடவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றவர் என்ற புதிய உலக சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ நிகழ்த்தியுள்ளார்.

Related Articles

Back to top button