செய்திகள்

கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை பூட்டு..

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை(05.05.19) கிறிஸ்துவ தேவாலயங்களில் மத வழிபாட்டு நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்று கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு காரணங்களால் ஆராதனைகள் நடத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். அதன்படி நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களிலும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தேவ ஆராதனைகள் நடத்த வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை பாதுகாப்புத் தொடர்பான காரணங்களால் கொழும்பிலுள்ள கத்தோலிக்கத் தனியார் பாடசாலைகளை அடுத்தவாரமும் திறக்க வேண்டாம் எனப் பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com