கிலன்ஈகிள்ஸ் தோட்டத்துக்கு செல்லும் பிரதான பாதை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் .
நுவரெலிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட லிந்துல_கிலன்ஈகிள்ஸ் (மிளகுசேனை) தோட்டத்துக்கு செல்லும் பிரதான பாதை சென்றெகுலர்ஸ் தோட்டத்திலிருந்து சுமார் 1km தூரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழைக்காலம் காரணமாக மக்கள் அந்த பாதையில் நடக்க முடியாத அளவுக்கு பாதையின் நிலை மோசமாக இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிளன்ஈகிள்ஸ் வாழ் மக்கள் தங்களின் அன்றாட கடமைகளை நிறைவேற்றி கொள்ள, அத்தியாவசிய பொருட்களை நகரங்களுக்கு சென்று பெற்றுக்கொள்ள ,தேயிலை கொழுந்துகளை தொழிற்சாலைக்கு எடுத்துச்செல்ல தமது மேலதிக வருமானமாக பெறுகின்ற மரக்கறி பயிர்களை கொண்டு செல்ல என பல தேவைகளுக்கு இந்த பாதையையே பயன்படுத்துகின்றனர்.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தொடரும் இந்த பிரச்சனை தொடர்பாக யாரும் நடவடிக்கை எடுப்பதாக இல்லை ,மேலும் கிளன்ஈகிள்ஸ் தோட்டத்தில் சுமார் 165 குடும்பங்கள் உள்ளன.
650 கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.கோவில், தேவாலயம், விகாரை போன்ற மும்மத வழிபாட்டு தலங்களும் இங்கு உள்ளன.தரம் 1முதல்11 வரையான(1C) பாடசாலை ஒன்றும் உள்ளது.
மேலும் அங்கு அமைந்துள்ள நு/கிளன்ஈகிள்ஸ் த .வித்தியாலயத்துக்கு செல்கின்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வழியையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறாக இந்த பாதை மிளகுசேனை தோட்ட மக்களின் வாழ்க்கைக்கு அவசியமானதாக அமைகின்றது. இந்த பாதையை விரைவாக புணரமைக்க வேண்டியது அவசரமானதும் ,அவசியமானதுமாகும்.ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் இம்மக்களை பிரதநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் கூடுதலான கவனத்தை செலுத்தி மிக விரைவில் இந்த பாதையை புணரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். என பொதுமக்கள் சார்பில் கோரப்பட்டுள்ளது.
அருள்செல்வம்