...
நுவரெலியாமலையகம்

கிளங்கன் வைத்தியசாலையில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்

அன்றாடம் மலையக மக்கள் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் சந்தித்து வரும் சொல்லனா துயரங்களில் ஒன்று நோயளிகளின் அவலம். கிளங்கன் வைத்தியசாலையில் செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் இடம்பெறும் கிளிக் பரிசோதனைக்காக நூற்றுக் கணக்கான நோயாளர்கள் கிள்ங்கன் வைத்தியசலைக்கு வருகைத் தருகின்றனர்.

இவர்களில் வயதானவர்களே அதிக பேர் காலை ஆறு மணிக்கெல்லாம் புறப்பட்டு வைத்தியசாலைக்கு வந்து இலக்கம் எடுத்துக் கொண்டு வரிசியில் நிற்கிற இவர்கள் பெரும்பாலும் காலை உணவை எடுத்துக் கொள்ளாமலும் சில இடங்களில் போக்குவரத்து வசதி நேர்த்திற்கு இல்லாத காரணத்தினாலும் தனியார் வாகனங்களில் வந்து வ்ரிசையில் கால் கடுக்க் நிற்கும் பலருக்கு தான் எந்த வரிசையில் நிற்கிறோம் என்பது கூட தெரியாமல் இன்னொரு நோயாளர்களுக்கான வரிசையில் காத்திருந்து மீண்டும் முதலில் இருந்து இன்னொரு வரிசைக்கு மாறி காலை ஆறு மணிக்கு வரும் இவர்களை வைத்தியர் சந்திக்க ஆரம்பிக்கும் நேரம் காலை 7:30 மணிக்கு மேல் ஆகிறது.

வயதானவர்கள அதிலும் சிங்கள. மொழி தெரியதோர் படும் அவஸ்த்தைகள் பரிதாபம் உண்மையில் முன்பிருந்த மருத்துவ வசதிகளை விட இன்று எவ்வளவோ பரவாயில்லை என்றாலும் இன்றைய நிலையே இப்படி இருக்கிறதே எனும் போது அன்றைய நோயாளர்கள் பாவம் தான் முன்பெல்லம் ஒரு வருத்தம் என்றால் உட்னடியாக நோயளர்கள் நாவலப்பிட்டி நுவரெலியா மற்றும் கண்டி பேராதனை வைத்தியசாலைக்கே அனுப்பி வைப்பார்கள் இதன் போது போக்குவரத்து உணவு என பட்ட துயரம் சொல்லி மாலாது…

இன்று கிளங்கன் வைத்தியசாலை என்பது எத்தனையோ பெரிய வரப் பிரசாதம் எனலாம். இன்று கிளங்கன் வைத்தியசாலையில் கிளினிக்கிற்கு வந்து வெய்யில் மழையில் கால் கடுக்க காத்திருக்கும் நோயாளர்களுக்கு வரிசையில் அமர கதிரைகள் மிக அத்தியாவசியமானது. மேலும் நோயளர்கள் மழையில் நனையாமல் வெயிலில் காயாமல் பாதுகாக்க கூடர வசதிகள் செய்து கொடுக்கப் படல் வேண்டும்.

வரும் நோயளர்களுக்கு அவர்களுக்கு தேவையன விடயங்களை செய்து கொடுக்க அவர்களை சரியான வைத்தியர்களிடம் கொண்டு செல்ல உதவக் கூடிய தமிழ் மற்றும் சிங்களம் பேசக் கூடிய சேவையளர்களை இணைத்துக் கொள்ள் வேண்டும் மேலும் கிளங்கன் வைத்திய சாலையில் பெரும்பலான வைத்தியர்கள் சிங்கள மொழி பேசக் கூடியவர்களாகவே இருக்கிறார்க்ள். இவர்களுக்கு ஓரளவு தமிழ் மொழி பரிச்சையம் இருந்தாலும் தமிழில் பேசுவதை முற்றாக புரிந்துக் கொள்வது சிரமமே எனவே வைத்தியர்களின் அருகாமையில் மொழிப் பெயர்ப்பளர்களினது அவசியம் உள்ளது.

மேலும் வைத்திய சாலைக்கு வரும் நோயாளர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்க வாகன நிறுத்துமிடம் இல்லை. வைத்திய சாலைக்கு வரும் நோயளர்களின் உறவினர் பாதுகாவலர்கள் ஓய்வெடுக்க ஒரு இடவசதி இல்லை. கிளங்கன் வைத்தியசாலையின் தேவைகள் அதன் சேவைகளை நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிட்வோ தரத்தை தாழ்த்திவிடவோ இல்லை இங்கு சேவையாற்றும் பெரும்பாலான வைத்தியர்கள் நர்ஸ்மார் உள்ளிட்ட சேவையாளர்களில் பெரும்பாலானோர் தமது சேவையை அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் ஆற்றுவதை மனதார பாராட்டுகிறோம்.

இந்த நிலையில் நிலவும் மேற்படி தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பீர்களாக இருந்தால் பேருதவியாக இருக்கும். வரிசியை பாருங்கள் இந்த புகைப்படங்களானது காலை 9:30 ற்கு எடுக்கப் பட்ட புகைப்படம் இந்தளவு மக்கள் எத்தனை மணிக்கு கிளினிக் முடிந்து வீட்டுக்கு போவர்கள் ? நோயாளர்களான இவர்கள் ஏற்கனவே காலை உணவையும் பகல் உணவையும் ஒவ்வொரு நாள் க்ளினிக்கின் போதும் இழக்க நேரிடுவதோடு இது போன்ற பௌதீக சூழல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் பல நோயாளர்கள் க்ளினிக்கிற்கே வர் பயந்து வீடுகளிலேயே இருந்து இறந்துவிடுகிற் நிலமை இங்கே கண்கூடு.

மலையக அரசியல்வாதிகள் அனைவரும் இந்த் கிளங்கன் வைத்தியசாலைக்காக தங்களால் இயன்ற ஒத்துழைப்பினை வழங்கி வருவதை செய்திகளில் அறிகிறோம் எனவெ இந்த அடிப்படி பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முன் வருவீர்கள் என் பெரும் எதிர் பார்ப்பில் இந்த பதிவினை முன்வைக்கிறோம் !

கேஜி

Related Articles

Back to top button


Thubinail image
Screen