...
செய்திகள்

கிளங்கன் வைத்தியசாலையில் செவ்வய்க்கிழமை க்ளினிக் வரிசை!

அன்றாடம் மலையக மக்கள் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் சந்தித்து வரும் சொல்லனா துயரங்களில் ஒன்று நோயளிகளின் அவலம். கிளங்கன் வைத்தியசாலையில் செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் இடம்பெறும் கிளிக் பரிசோதனைக்காக நூற்றுக் கணக்கான நோயாளர்கள் கிள்ங்கன் வைத்தியசலைக்கு வருகைத் தருகின்றனர்.

இவர்களில் வயதானவர்களே அதிக பேர் காலை ஆறு மணிக்கெல்லாம் புறப்பட்டு வைத்தியசாலைக்கு வந்து இலக்கம் எடுத்துக் கொண்டு வரிசியில் நிற்கிற இவர்கள் பெரும்பாலும் காலை உணவை எடுத்துக் கொள்ளாமலும் சில இடங்களில் போக்குவரத்து வசதி நேர்த்திற்கு இல்லாத காரணத்தினாலும் தனியார் வாகனங்களில் வந்து வ்ரிசையில் கால் கடுக்க் நிற்கும் பலருக்கு தான் எந்த வரிசையில் நிற்கிறோம் என்பது கூட தெரியாமல் இன்னொரு நோயாளர்களுக்கான வரிசையில் காத்திருந்து மீண்டும் முதலில் இருந்து இன்னொரு வரிசைக்கு மாறி காலை ஆறு மணிக்கு வரும் இவர்களை வைத்தியர் சந்திக்க ஆரம்பிக்கும் நேரம் காலை 7:30 மணிக்கு மேல் ஆகிறது.

வயதானவர்கள அதிலும் சிங்கள. மொழி தெரியதோர் படும் அவஸ்த்தைகள் பரிதாபம் உண்மையில் முன்பிருந்த மருத்துவ வசதிகளை விட இன்று எவ்வளவோ பரவாயில்லை என்றாலும் இன்றைய நிலையே இப்படி இருக்கிறதே எனும் போது அன்றைய நோயாளர்கள் பாவம் தான் முன்பெல்லம் ஒரு வருத்தம் என்றால் உட்னடியாக நோயளர்கள் நாவலப்பிட்டி நுவரெலியா மற்றும் கண்டி பேராதனை வைத்தியசாலைக்கே அனுப்பி வைப்பார்கள் இதன் போது போக்குவரத்து உணவு என பட்ட துயரம் சொல்லி மாலாது…

இன்று கிளங்கன் வைத்தியசாலை என்பது எத்தனையோ பெரிய வரப் பிரசாதம் எனலாம். இன்று கிளங்கன் வைத்தியசாலையில் கிளினிக்கிற்கு வந்து வெய்யில் மழையில் கால் கடுக்க காத்திருக்கும் நோயாளர்களுக்கு வரிசையில் அமர கதிரைகள் மிக அத்தியாவசியமானது. மேலும் நோயளர்கள் மழையில் நனையாமல் வெயிலில் காயாமல் பாதுகாக்க கூடர வசதிகள் செய்து கொடுக்கப் படல் வேண்டும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen