மலையகம்

கிளவட்டன், பங்களா டிவிசன் லயன் குடியிருப்பு பகுதியில் பாரிய நில வெடிப்பு

தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் நோர்வூட் பிரதேச சபைக்குற்பட்ட லெதண்டி கிராம சேவகர் பிரிவின் கிளவட்டன் பங்களா டிவிசன் லயன் குடியிருப்பொன்றின் பின்புறமுள்ள மண்மேட்டில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளமையினால் அப்பகுதிகுடியிருப்பாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள பகுதிக்கு 08.06.2018 காலை விஜயம் செய்த பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் நிலமைய பார்வையிட்டதுடன், ஒஸ்போன் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி வெடிப்புகள் ஏற்பட்டுள்ள மண்மேட்டு பகுதியின் மேல் பகுதியிலுள்ள நீர் வடிகானை அகளப்படுத்த நடவடிக்கை எடுத்ததுடன், பிரதேச கிராம உத்தியோகஸ்தருக்கு அறிவிக்கப்பட்டு பாதிப்புகள் தொடர்பில் அம்பமுவ பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நோர்ட்டன் ராம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button