செய்திகள்

கிளிநொச்சியில் மண்ணில் புதையுண்டிருந்த ஆயுதங்கள் மீட்பு.

கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப் பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பெய்த பலத்த மழையின்போது அவை வெளியே வந்துள்ளன.

இது தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப்படையினர் அவற்றை இன்று (21) மீட்டுள்ளனர். ரி -56 ரக துப்பாக்கிகள் 5, வெற்று ரவை -1 மற்றம் 30 தோட்டாக்களையுமே மீட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டு பயிற்சி இடம்பெறும் பகுதி என்பதால் அவை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் அறிவுறுத்தலின் பிராகரம் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button