செய்திகள்

கிளிநொச்சி- உருத்திரபுரம்- அருள்மிகு உருத்திரபுரீஸ்வரி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் திருக்கோயில் 

பித்தா என்றழைக்கப் பெருமை கொண்ட பெருமானே
சித்தம் கலங்கியோர் உன்னிடத்தைத் தோண்டுகின்றார்
நித்தம் இக் கொடுமை நிலவவிடக் கூடாது
எங்கும் நிறைந்தவனே இக்கொடுமை தடுத்துவிடு
உருத்திரபுரீஸ்வரி அம்மையுடனுறையும் சிவனே
உண்மையை வெளிப்படுத்தி உலகத்தில் உயர்ந்துவிடு
வஞ்சகமனம் கொண்டோர் வழியைநீ தடுத்துவிடு
குஞ்சரமுகங் கொண்டோன் தந்தையே எழுந்துவிடு
வளம் மிக்க வரலாறு உன்னதென்று உணர்த்திவிடு
இருபது தசாப்தங்களுக்கு முன்னரே உன் திருக்கோயில் 
இருந்து வரும் வரலாறு அறியாத மூடர்களின்
தவறான செயற்பாட்டை தகர்த்து எறிந்து விடு
காலத்தால் முந்திய இருப்புடைய உன் தலத்தில்
சோழத்தமிழ் பேரரசு திருப்பணிகள் செய்தமையும்
நீண்ட நெடுங்கால வரலாறு உள்ளதையும் அறியாது
தோண்டமுனைவோரைத் தொடைநடுங்கச் செய்துவிடு
வயல் சூழ்ந்த நன்னிலத்தில் வளமான குளத்தருகில்
அமர்ந்தருளும் பேரருளே உருத்திரபுரீஸ்வரப் பெருமானே
திடமாக நம்வாழ்வு வளம்பெற்று நிலைத்திடவே
தவறாமல் வழியமைத்து விட்டுவிடு
நான்மறையின் நாயகனே நல்லவழி காட்டிவிடு
ஏங்கிநிற்கும் மனங்களிலே நிம்மதியே நிறைந்துவிட
அல்லல் தரும் பகையகற்றிவிடும் ஆற்றலை நீ தந்துவிடு
நன்நிலையை நாமடைய உன்திருவடியே துணைவரட்டும்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button