...
செய்திகள்

கிளிநொச்சி நகர வர்த்தக நடவடிக்கைகளை முடக்கத் தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனாப் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த நடவடிக்கை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) 20.08.2021 தொடக்கம் 25.08.2021 வரை கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சி சேவைச் சந்தையும் இன்று முதல் கரைச்சி பிரதேச சபையினால் மூடப்பட்ட நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் பொது இடங்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நாட்டில் நேற்று வரையில் 35 நகரங்களின் வர்த்தக நடவடிக்கைகளை முடக்கி வர்த்தகர்கள் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen