செய்திகள்

கிளிநொச்சி- பரந்தன்- குமரபுரம்- அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் 

குமரபுரம் வீற்றிருந்து அருள்வழங்கும் குமரேசா
குறைவில்லா நிறைவாழ்வை எங்களுக்குத் தந்திடைய்யா 
கூடி வரும் நலன்களெல்லாம் எமை வந்து சேர்ந்திடவே
கூடியிருந்தெமக்கு துணையாக உதவிடைய்யா
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தனிலே கோயில் கொண்ட குமரேசா
கிலி கொண்டு வாழும் நிலை முற்றாய் ஒழித்திடைய்யா
தில்லை நடராசனின் திருவருளை நாமடைந்து
அல்லல் போக்கி விட அருள் செய்து உதவிடைய்யா
வளம் மிகுந்த தமிழ் மண்ணில் வரமளிக்கும் குமரேசா
வாழ்வினிலே தாழ்வில்லா நிலை எமக்குத் தந்திடைய்யா 
வேல் கொண்டு அருளுகின்றவுன் அருளை நாம் பெற்று
வேதனைகளற்றவராய் வாழ்ந்திடவே உதவிடைய்யா
வினைதீர்க்கும் விநாயகனுக்கு இளையோனே குமரேசா 
வித்தைகளை நம்மவர்கள் கற்றுணரும் ஆற்றலையும் தந்திடைய்யா 
வீரம் தனைக் கொண்டு தலைநிமிர்ந்து நாம் வாழ 
விரைந்து வந்து உடனிருந்து எமக்கு நீ உதவிடைய்யா
தெய்வானைத் திருமகளைத் துணையாகக் கொண்ட குமரேசா 
வள்ளியம்மையினருளையும் ஒன்றுசேர தந்திடைய்யா 
தொன்மைமிகு நம் நாட்டில் நிலையாக நீயிருந்து 
தொல்லையின்றி நாம் வாழ உரியவை செய்து உதவிடைய்யா
அறம் காத்து மறமளிக்க அவதரிக்கும் குமரேசா 
ஆற்றலுடன் எழுச்சி பெற்று வாழ வழி தந்திடைய்யா 
கதிர்காமத் திருத்தலத்தில் மறைந்திருந்து அருளும் நீ
குமரபுரம் வெளிவந்து ஒளி பெருக்கி உதவிடைய்யா. 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button