செய்திகள்

கிளிநொச்சி – பூநகரி கடலில் சீனர்கள் ; கடலை மீட்டுத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை.!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவில் எவ்வித அனுமதியும் இன்றி இலங்கை – சீன கூட்டு நிறுவனமொன்று கடல் அட்டைப் பண்ணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலத்திற்குள் இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்றினால் சட்டவிரோதமாக அட்டைப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றுமுன்தினம் அவ்விடத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கௌதாரிமுனை கடலை சீனர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு கடல் அட்டை பண்ணையை மேற்கொள்ள இங்குள்ள மக்கள் பல தடவைகள் கோரியும் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தற்போது சீனர்கள் அட்டைக் குஞ்சுகளை விட்டு பண்ணையை ஆரம்பித்துள்ளதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Articles

Back to top button