செய்திகள்

கிளிநொச்சி- வட்டக்கச்சி மாயவனூர் அருள்மிகு இரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் 

மாயவனூர் திருவிடத்தில் கோயில் கொண்ட பெருமாளே
மனவலிமை தந்து எம்மை வழிநடத்த வேண்டுமய்யா
அண்டவரும் துன்பங்களை அகற்றிவிட வேண்டும் 
அருள்வழங்கி உடனிருப்பாய் இரங்கநாதப் பெருமாள்.. 
வளங்கள் கொண்ட பெருநிலத்தில் குடியிருக்கும் பெருமாளே
வற்றாத உன்னருளால் மனமகிழ்ந்து வாழ்ந்திடவும்
எத்திக்கும் தமிழர்நிலை உயர்ந்து பரவிடவும்
துணையிருந்து வலுவளிப்பாய் இரங்கநாதப் பெருமாள்.. 
மருதநிலச் சூழலிலே மம்மில் குளத்தருகே அமர்ந்தருளும் பெருமாளே
துணிவுடனே வாழ்ந்திடவும், துன்பங்கள் நீங்கிடவும்
எதிர்காலம் சிறப்புற்று உயர்வு நிலையடைந்திடவும்
அருகிருந்து அருளிடுவாய் இரங்கநாதப் பெருமாள்.. 
கிளிநொச்சி மாநிலத்தில் கோலோச்சம் பெருமாளே
கிலிகொண்டு வாழ்ந்த நிலை இனியிருக்கக் கூடாதையா
வலிமைகொண்ட தமிழர்களாய் வாழவழி செய்திடுவாய்
வட்டக்கச்சியமர்ந்த இரங்கநாதப் பெருமாள்.. 
ஆவணியில் தேரேறும் திருமகனே பெருமாளே
நேர்மையும், நிதானமும் நிறைந்தநிலை கொண்டு உயர்வு பெற்று 
தரணியிலே தலைநிமிர்ந்து நாம் வாழ 
மனங்கொண்டு அருளிடுவாய் இரங்கநாதப் பெருமாள்.. 
வயல் சூழ்ந்த பெருநிலத்தில் நிலைத்திருக்கும் பெருமாளே
வற்றாத வளம்பெற்று நாம் நிற்கும் நிலை வேண்டும் 
தப்பாமல் எம்குறைகள் தீர்த்தருள வேண்டுகின்றோம்
துயில்நீங்கி எழுந்துவா இரங்கநாதப் பெருமாளே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button