ஆன்மீகம்

கிழக்கு மாகாணம்- திருகோணமலை- தம்பலகாமம்- அருள்மிகு ஆதிகோணேசுவரர் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

 

மருதநிலச் சூழலிலே கோயில் கொண்ட மாமணியே
மனநிறைவு தந்தெம்மை வாழ வைப்பாய் பேரருளே
மகிழ்வுநிறை வாழ்வினையே எமக்களிக்க வாருமைய்யா
தம்பலகாமம் கோயிலுறை ஆதிகோணேசுவரப் பெருமானே

கிழக்கிலங்கை வீற்றிருந்து கருணை தரும் மாமணியே
கிலேசமில்லா நிறை வாழ்வை வாழவைப்பாய் பேரருளே
கௌரவமாய் வாழும் வழி எமக்களிக்க வாருமைய்யா
தம்பலகாமம் கோயிலுறை ஆதிகோணேசுவரப் பெருமானே

பழம் பெருமை கொண்ட திருப்பதியில் அமர்ந்தருளும் மாமணியே
பாழ்படா நிலை தந்து வாழவைப்பாய் பேரருளே
பெருமை குன்றா வாழ்வினையே எமக்களிக்க வாருமைய்யா
தம்பலகாமம் கோயிலுறை ஆதிகோணேசுவரப் பெருமானே

தமிழ் மன்னர் திருப்பணிகள் பெற்ற எங்கள் மாமணியே
தளராத மனவுறுதி தந்து வாழ வைப்பாய் பேரருளே
திறன் குன்றா நல்வாழ்வை எமக்களிக்க வாருமைய்யா
தம்பலகாமம் கோயிலுறை ஆதிகோணேசுவரப் பெருமானே

தமிழ் மொழியைத் தரணிக்கு உவந்தளித்த மாமணியே
தன்மானம் கொண்டவராய் வாழவைப்பாய் பேரருளே
துன்பங்கள் நெருங்காத வாழ்வினையே எமக்களிக்க வாருமைய்யா
தம்பலகாமம் கோயிலுறை ஆதிகோணேசுவரப் பெருமானே

கருணை மழை பொழிகின்ற திருவருளே மாமணியே
தமிழ்க் குலத்தை மானமுடன் வாழவைப்பாய் பேரருளே
நிம்மதி நிறைந்த வாழ்வினையே எமக்களிக்க வாருமைய்யா
தம்பலகாமம் கோயிலுறை ஆதிகோணேசுவரப் பெருமானே.

 

Related Articles

Back to top button