செய்திகள்

கீகன கமகேவுக்கு மரண தண்டனை.

மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருவரை   கொலை  செய்தமை தொடர்பில் ஜூலம்பிட்டிய அமரே எனறழைக்கப்படும் கீகன கமகே அமரசிறி என்பவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்துள்ளது.

தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித குற்றவாளிக்கு இன்று மரண தண்டனையை விதித்து உத்தரவிட்டார்.

2012 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 15 ஆம் திகதி  கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின் போது துப்பாக்கி  பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி பிரயோகத்தின் போது கட்டுவன பகுதியை சேர்ந்த பெண்ணொருவரும், இளைஞர் ஒருவரும் உயிரிழந்தனர்.

Related Articles

Back to top button
image download