மலையகம்

கீர்த்தி ஸ்ரீ விருதுகளை பெற்ற மலையகத்தை சார்ந்த அகில இலங்கை சமாதான நீதிவான்கள்

கொழும்பில் இன்று அகில இலங்கை சமாதான நீதிவான்களுக்கு கீர்த்தி ஸ்ரீ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் மலையகத்தை சார்ந்த அகில இலங்கை சமாதான நீதிவான்களான கண்டி திகன நித்துலேமடயைச் சேர்ந்த த.சசிகுமார் மற்றும் நுவரெலியா மெராயா தங்ககலையை சேர்ந்த சு.ஆறுமுகம் ஆகிய இருவரும் கீர்த்தி ஸ்ரீ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த விருது வழங்கும் நிகழ்வை தேசிய நீதிவான்கள் பேரவை ஒழுங்கு செய்திருந்தது.

Related Articles

Back to top button
image download