விளையாட்டு

குசல் மெண்டிஸ் உட்பட மூவருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஒரு வருட தடை..

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கட்டாய உயிர்குமிழி நடைமுறையை மீறிச் செயற்பட்டமைக்காக அவர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button