சமூகம்

குடும்பத் தகராறால் அண்ணா தப்பிக்கு செய்த செயல்

மின்னேரியா – மஹரத்மலே பிரதேசத்தில் நபரொருவர் தனது இளைய சகோதரரை தடியொன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், அவர்களது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்துபசாரம் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவருக்குமிடையில் நீண்ட காலமாக குடும்பத் தகராறு காணப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 43 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் முத்த சகோதரரை இன்று ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பெலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button