செய்திகள்

‘குடு நோனி’ கைது.!

பொதி சேவையைப் பயன்படுத்திப் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட ‘குடு நோனி’ என்றழைக்கப்படும் பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்துக்கு பொதியொன்றை அனுப்பிய நிலையிலேயே அவர் ​கைது செய்யப்பட்டுள்ளார். 49 வயதான குறித்த பெண் நாடு முழுவதும் பொதிகள் சேவை மூலம் போதைபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொம்பனித்தெருவை வசிப்பிடமாகக் கொண்ட குடு நோனியை கைது செய்ததாக, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related Articles

Back to top button