...
செய்திகள்

குடைசாய்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காரைநகர் சாலைக்குச் சொந்தமான 784 வழித்தடப் பேருந்தே இன்று காலை 7.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த பஸ் கல்லுண்டாய் பகுதியில் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்ப்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டையிழந்து இழுத்துச் செல்லப்பட்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், காயமடைந்த பயணிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen