செய்திகள்

குணமடைவோர் சுட்டியில் இலங்கைக்கு 4 ஆவது இடம்

இலங்கையில் இன்றைய (08) தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 1890 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு கொரோனா கொத்தணியைச் சேர்ந்த 920 பேர்இன்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மொத்த கொரோனா வைரசு தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 21 ஆயிரத்து 338 ஆக அதிகரித:தள்ளது.
17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 இலட்சத்திற்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சுட்டியில் 83.8 சதவீதம் என்ற அளவில் இலங்கை காணப்படுகின்றது. இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து இந்த சுட்டியில் 4வது இடத்திற்கு இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏப்ரல் சித்திரை புத்தாண்டை தொடர்ந்து தற்போது பரவி வரும் கொகோரனா பரவலின் 3ஆம் அலையைத் தொடர்ந்து, இதுவரை நாட்டின் 14 மாவட்டங்களில் உள்ள 138 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் பயன்பாட்டிற்காக இலங்கை இராணுவம் சீதுவை பிரதேசத்தில் அமைத்து வரும் வைத்தியசாலையை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று நேரில் சென்று பார்வையிட்டார். இராணுவ சேவையின் வனிதா மகளிர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சனும் இதில் கலந்து கொண்டார்.

Related Articles

Back to top button