விளையாட்டு

குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக நெல்கா ஷிரோமாலா தெரிவு!

ஜப்பானில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் ரீ. நெல்கா ஷிரோமாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காலி, ரிபன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ள நெல்கா, 1997 ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளதுடன், பொலிஸ் கழகம் சார்பில் 2001 ஆம் ஆண்டு முதல் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றவராவார்.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் குத்துச் சண்டை போட்டிகளின் நடுவராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளின் நடுவராகவும் செயற்பட்டு வரும் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நெல்கா ஷிரோமாலா, 2017 ஆம் ஆண்டில் ஆசியாவின் சிறந்த குத்துச் சண்டை நடுவருக்கான விருதினை பெற்றிருந்தார்.

இந்த நிலையிலேயே தற்போது ஒலிம்பிக் போட்டிகளின் குத்துச் சண்டை நடுவராகவும், தீர்மானிப்பாளராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button