நிகழ்வுகள்பதுளைமலையகம்

“குன்றிலிருந்து கோட்டைக்கு..” நூலின் அறிமுக விழா பதுளையில் ..

மலையகத்தின் மூத்த கல்விமான் எம்.வாமதேவன் எழுதிய “குன்றிலிருந்து கோட்டைக்கு..” நூலின் அறிமுக விழா பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணிக்கு பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சரஸ்வதி தேசிய கல்லூரியின் அதிபரும், கலை இலக்கிய வட்டத்தின் உப தலைவருமான கே.திருலோகசங்கர் நிகழ்விற்கு தலைமை தாங்க உள்ளார்.

நூலின் ஆய்வுரையை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் மார்கண்டன் ரூபவதனன் ஆற்றவுள்ளார்.

பண்டாரவளை நகர சபையின் ஆணையாளர் த.கஜேந்திரகுமார், ஹாலிஎல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி.இரா.சுகந்தினி, பண்டாரவளை வலயக் கல்விக் காரியாலயத்தின் ஆசிரிய ஆலோசகர் என். மனோகரன் ஆகியோர் நூல் தொடர்பான கருத்துரைகளை வழங்க உள்ளனர்.

கலை இலக்கிய வட்டத் தலைவர் வை.தேவராஜா வாழ்த்துரையையும், செயலாளர் ஆ.புவியரசன் நன்றி உரையையும் வழங்க உள்ளதோடு ஆசிரியர் இரா.ராஜீவ்காந்தி நிகழ்வுகளை தொகுத்து வழங்க உள்ளார். நிகழ்வில் சிறப்பு பிரதிகள் வழங்கல், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான இலவச நூல் பகிர்வு என்பன இடம்பெறவுள்ளன.

பசறை நிருபர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com