மலையகம்

குன்றும் குழியுமாக காணப்படும் டெல்டா பெரட்டாசி வீதி

புசல்லாவையில் இருந்து பெரட்டாசி நோக்கி செல்லும் பாதையே இது.

பல வருடங்களாக செப்பனிடப்படாமல் இருப்பதால் அந்தப் பாதையை பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 11 தோட்டங்களைச் சேர்ந்த 20,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இப்பிரதேசத்தில், புசல்லாவை அல்லது நுவரெலியாவிற்கு செல்வதாயின் இப்பிரதான வீதியின் மூலமாகவே செல்ல முடியும்.
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
இப்படியான முக்கியத்துவமான பாதை சீரமைக்கப்படாமையினால் பாடசாலை மாணவர்கள்,நோயாளிகள், கர்ப்பிணித்தாய்மார்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் அவ்வீதியில் சேவையில் ஈடுபடும் ஒரு சில தனியார் பஸ்களும் பல தடவை வீதி மோசமானதாக (பாரிய குன்றும் குழியுமாக) இருப்பதால், தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி இறப்பு சம்பவங்களும் நேர்ந்துள்ளது.
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
அதுமட்டுமில்லாது நோயாளிகள், கர்ப்பிணித்தாய்மார்கள் மோசமான வீதி வழியாகவே வகுபிட்டி அல்லது கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டியுள்ளது செல்லும் வழியிலே பலர் உயிர் துறந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் அடிக்கடி நடந்தேறுகின்றது. மழைக் காலங்களில் மேலும் மோசமானதொரு நிலை காணப்படுவதாகவும், தொழிலுக்கு செல்வோரும் பாடசாலை மாணவர்களும் மிகவும் அசவ்கரியகளுக்கு உள்ளாகுகின்ற்னர்.
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
இது தொடர்பாக இப்பிரதேச மக்கள் பல போராட்டங்கள் நடத்தியும் உரிய அதிகாரிகளால் தகுந்த நடவடிக்கை எடுக்கப் படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் தோட்ட நிர்வாகத்திற்கு உட்பட்டதாய் இருந்த இவ்வீதி, அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பின்னும் இன்னும் ஒரு தீர்வின்றி காணப்படுகின்றது. தேர்தல் காலங்களில் வரும் அரசியல்வாதிகள் நிறைவேறாத வாக்குறுதிகளை ஓட்டுக்காக மாத்திரம் வந்து வழங்கிச் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் பல உயிரிழப்புகள் இடம்பெறமுன் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அப்பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
[siteorigin_widget class=”WP_Widget_Custom_HTML”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com