செய்திகள்

குப்பைகளை உரமாக்கும் தொழிற்சாலை திறப்பு.!

யாழ். வடமராட்சி முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா நிதியில் உருவாக்கப்பட்ட சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையால் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. கரவெட்டி பிரதேச சபையின் கீழ் காணப்படும் இந்த தொழிற்சாலை மூலம் பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button