Breaking Newsமலையகம்விளையாட்டு

குருணாகல் – கைப்பந்தாட்ட போட்டியில் மாவத்தகமை, முவன்கந்தை சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் சாதனை

குருணாகல் - கைப்பந்தாட்ட போட்டியில் மாவத்தகமை, முவன்கந்தை சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் சாதனை

குருணாகல் வலயக் கல்விப் பணிமனை நடத்தும் அனைத்துப் பாடசாலைகளுக்கு இடையிலான 2022 கைப்பந்தாட்டப் போட்டி கடந்த 29 ஆம் திகதி குருணாகல் மலியதேவ மாதிரிப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

போட்டிகளில் மாவத்தகமை, முவன்கந்தை சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் இம்முறை சாதனை படைத்துள்ளது.

குறித்த பாடசாலை ஏனைய பாடசாலைகளுக்கு சவாலாகத் திகழ்ந்து ,18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தையும், பெண்கள் பிரிவில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.
இந்த இரு குழுக்களும் அடுத்து நடைபெறும் குருணாகல், புத்தளம் மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகாண போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன.
இக்குழுக்களுக்கு பயிற்றுவிப்பாளர்களாக திரு.பிரபாஷ் வீரசிங்க, திருமதி. எஸ்.பிரதிகலா ஆகியோர் செயற்பட்டனர்.

Related Articles

Back to top button