செய்திகள்

குருணாகல்-மாவத்தகமை, முவன்கந்தை அருள்மிகு மாரியம்மன் கோவில்.

அருள்தந்து ஆற்றல்தந்து வழிநடத்தும் தாயே
அணைத்தெம்மை காத்திடவே வந்திடுவாய் அம்மா
இரப்பர் மரத் தோட்டத்திலே குடியிருக்கும் தாயே
இன்பம் நிறை வாழ்வுக்கே வழி செய்வாய் அம்மா

நோய் நொடிகள் அண்டாத வாழ்வு வேண்டும் தாயே
முன்னின்று காத்தருள வந்திடுவாய் அம்மா
சூழவரும் துன்பங்களை தடுத்திடுவாய் தாயே
உன் அருளே எமைக் காக்குமென நம்புகிறோம் அம்மா

முவன்கந்தை நல்லூரில் கோயில் கொண்ட தாயே
தமிழ் வாழ தரணியிலே துணையிருப்பாய் அம்மா
குருணாகல் மாவட்டத்தின் மாவத்தகமையில் குடியிருக்கும் தாயே
குறைவில்லா நிறை வாழ்வைத் தந்திடுவாய் அம்மா

பெரு நோய்கள் நெருங்காத நிலை வேண்டும் தாயே
வந்த நோய் அகன்றுவிட வழி வேண்டும் அம்மா
உற்றாரும் உறவினரும் நலம் பெறவே தாயே
உன் கருணை பெருக வேண்டும் அம்மா

அருள் பொழிய வீற்றிருக்கும் அன்புருவே தாயே
அச்சமில்லா நிம்மதிக்கு நீயே துணையம்மா
இப்புவியில் இன்பமுற நாம் வாழ வேண்டும் தாயே
நம்பினோம் காத்தருள்வாய் நாயகியே முத்துமாரியம்மா.

ஆக்கம்-த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
image download