செய்திகள்

குருதியை சேமிக்கும் பைகளுக்குத் தட்டுப்பாடு!

மத்திய குருதி வங்கியில், குருதியை சேமிக்கும் பிளாஸ்த்ரிக் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குருதியேற்றத்திற்கான உபகரணங்களுக்கும், அடுத்த வாரமளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் கே திலக்கரத்ன, குறிப்பிட்ட காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமையால், நோயாளர்களுக்கான சிகிச்சைப் பணிகளுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலை கட்டமைப்பில், மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய குருதி வங்கி உள்ளிட்ட ஏனைய அனைத்து குருதி வங்கிகளிலும், குருதியை சேமிப்பதற்கான பிளாஸ்த்ரிக் பைகள் உள்ளிட்ட அவசியமான ஏனைய உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Related Articles

Back to top button